பிரதமரை கொஞ்சி தேசத்தின் டார்லிங்கான நயிஷா… நிலச்சரிவில் தந்தை, சகோதரிகளை இழந்த சிறுமி!

இந்தியா

சமீபத்தில் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொல்வதற்காக பிரதமர் மோடி, அங்கு சென்றார். முகாமில் தங்கியிருந்த பலதரப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், மேப்பாடியிலுள்ள மூப்பன் மருத்துவமனைக்கு சென்ற போதுதான், தற்போது தேசத்தின்  டார்லிங்காக மாறியுள்ள சிறுமி நயிஷா என்ற  ரூபியாவை சந்தித்தார்.

மூன்றே வயது நிரம்பிய இந்த சிறுமியின் கதை துயரம் நிறைந்தது. நிலச்சரிவில் சிக்கி தனது தந்தையையும் சகோதரிகளையும்  இழந்தவர். மண்ணுக்குள் புதையுண்ட ரூபியாவை அங்கிருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ரூபியாவின் குடும்பத்தில் தாய் ஆயிஷாவை தவிர அனைவரும் மண்ணோடு மண்ணாகி விட்டனர்.

கொஞ்சம் லேட்டாகவே , படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரூபியா பற்றி ஆயிஷாவுக்கு தெரிய வந்தது. உடனே, ஓடோடி சென்று மருத்துவமனைக்கு சென்று குழந்தையை அரவணைத்து கொண்டு அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்ணீர் விட வைத்தது.

தான் சந்தித்த துயரத்தின் விளைவுகளை கூட உணர்ந்து  கொள்ள முடியாத  ரூபியாவை பிரதமர் மோடி பார்க்க வந்த போது, அவரை கை கூப்பி வணங்கி வரவேற்றாள். பதிலுக்கு பிரதமரும் கை கூப்பினார்.

ரூபியாவுக்கு நடந்த துயரங்களை கேட்டறிந்த பிரதமரின் மனமும் கனத்து போனது. இதையடுத்து, சில நிமிடங்கள் ரூபியாவுடன் பிரதமர் செலவிட, இந்த தருணத்தில்தான் பிரதமரை கொஞ்சியும் அவரின் முகத்தை வருடியும் ரூபியா தனது அன்பை வெளிப்படுத்தினார்.

பிரதமரும் தன்னை மறந்து சிறுமியுடன் கொஞ்சியது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது. ரூபியாவுடன் பிரதமர் நேரம் செலவிட்ட  போது, தனது அரசியல் ரீதியான நெருக்கடிகளை கூட கொஞ்ச நேரம் மறந்திருப்பார் என்றே நம்பலாம்.

வயநாடு நிலச்சரிவில் ரூபியா தனது தந்தை ஷாஜகான், சகோதரிகள் ஹீனா, ஃபைசா ஆகியோரை பறிகொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-எம்.குமரேசன் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசியல் என்ட்ரி… விஜய்க்கு கனிமொழி சொன்ன அட்வைஸ்!

மலையாள படத்தில் பாரதிராஜா… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *