புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 16-ந் தேதி தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் நேற்று முடிவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
புதுச்சேரியில் என்.டி.ஏ.- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக- அதிமுக- லஜக இடம் பெற்றுள்ளன. இதில், என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 இடங்களில் போட்டியிடுகின்றன.
என்.டி.ஏ.- தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள்
என்.ஆர்.காங்கிரஸ்
- தட்டாஞ்சாவடி – ரங்கசாமி
- மங்கலம் –
- கதிர்காமம் – கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ.
- இந்திரா நகர் – ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ.
- லாஸ்பேட்டை – வி.பி.சிவக்கொழுந்து (முன்னாள் சபாநாயகர்)
- முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன் (முன்னாள் எம்.எல்.ஏ.)
- அரியாங்குப்பம் – அய்யப்பன்
- ஏம்பலம் (தனி) – மோகன்தாஸ்
- நெட்டப்பாக்கம் (தனி) – ராஜவேலு (துணை சபாநாயகர்)
- பாகூர் – தியாகராஜன் (முன்னாள் அமைச்சர்)
- திருபுவனை (தனி) – கோபிகா (முன்னாள் எம்.எல்.ஏ.)
- வில்லியனூர் – ரவிக்குமார்
- உழவர்கரை – நாராயணசாமி (எ) நித்தியானந்தம்
- நெடுங்காடு – சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ.
- காரைக்கால் வடக்கு – அமைச்சர் திருமுருகன்
- ஏனாம் – மல்லாடி கிருஷ்ணாராவ் (முன்னாள் அமைச்சர்)
பா.ஜனதா
- ராஜ்பவன் – வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா மாநில தலைவர்)
- மண்ணாடிப்பட்டு – அமைச்சர் நமச்சிவாயம்
- மணவெளி – சபாநாயகர் செல்வம்
- காலாப்பட்டு – கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.
- ஊசுடு – தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ.
- முதலியார்பேட்டை – அமைச்சர் ஜான்குமார்
- திருநள்ளாறு – ஜி.என்.எஸ்.ராஜசேகரன் எம்.எல்.ஏ.
- நிரவி – திருபட்டினம் – மீனாட்சி சுந்தரம்
- காரைக்கால் தெற்கு – அருள்முருகன்
- மாகி – தினேஷன்
அ.தி.மு.க.
1. உப்பளம் – அன்பழகன் (முன்னாள் எம்.எல்.ஏ.)உருளையன்பேட்டை – காந்தி
ல.ஜ.க.
- காமராஜ் நகர் – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
- நெல்லித்தோப்பு – ஜெயக்குமார்
