ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்திய அமெரிக்கா- குறையும் கச்சா எண்ணெய் விலை!

Published On:

| By Mathi

Israel Iran War

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக ஈரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் “ஆக்கபூர்வமாக” இருந்ததே இந்த முடிவுக்குக் காரணம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தத் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் எரிபொருள் விலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால், மத்திய அரசு இந்தச் சூழலை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

ADVERTISEMENT

அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தனது கடுமையான எச்சரிக்கைகளால்தான் அமெரிக்கா பின்வாங்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்த 5 நாள் இடைவெளி மத்திய கிழக்கில் ஒரு முழுமையான அமைதிக்கு வழிவகுக்குமா அல்லது இது ஒரு தற்காலிகமான தீர்வாக மட்டுமே அமையுமா என்பதை உலக நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share