ADVERTISEMENT

“தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை” – பிரேமலதா

Published On:

| By Selvam

premalatha says aiadmk should allocate

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மே 29) தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “2024 நாடாளுமன்ற தேர்தலின் போது, 5 எம்.பி-க்களுடன் ராஜ்யசபா இடமும் தேமுதிகவுக்கு உறுதிசெய்யப்பட்டது. எனவே, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. premalatha says aiadmk should allocate

ADVERTISEMENT

அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம். ஏற்கனவே தேமுதிகவுக்கு வந்த ராஜ்யசபா வாய்ப்பை ஒரு முறை அன்புமணிக்கும், மற்றொரு முறை ஜி.கே.வாசனுக்கு வழங்கினார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இந்த முறை ராஜ்யசபா சீட் எங்களுக்கு தர வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி அவரது சொல்லில் நிச்சயம் உறுதியாக இருந்து மக்களுக்கும் அதிமுகவினருக்கும் அதை நிரூபிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

“ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று பல்வேறு கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக தேமுதிகவின் நிலைப்பாடு என்ன?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரேமலதா, “ஆளும் கட்சியிலும், ஆண்ட கட்சியின் மீதும் மக்கள் நம்பிக்கை இல்லாமல் தான் இருக்கிறார்கள். எனவே, வரும் காலங்களில் நிச்சயமாக ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும்” என்று தெரிவித்தார். premalatha says aiadmk should allocate

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share