நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 201 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இந்த 2025ம் தேர்தல் பீகாரில் பாஜக போட்டியிட்ட 101 தொகுதிகளில் 91 தொகுதிகளில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடந்த முறை 43 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 80 தொகுதிகிளில் முன்னிலை வகித்து வருகிறது.
தேஜஸ்வியின் யாதவின் ராஷ்டிர ஜனதா தளம் 29 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தேஜஸ்வி யாதவ் போட்டியிட் ரகோபூர் தொகுதியில் அவர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இந்த தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி 243 சட்டமன்ற தொகுதிகளில் 238 இடங்களில் போட்டியிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களின் மூன்றாவது தேர்வாக ஜன் சுராஜ் கட்சி இருக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கூட 2 முதல் 5 இடங்களில் ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெற கூடும் என் செய்திகள் வெளியானது. ஆனால் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் 5 தொகுதியில் முன்னிலை பெற்ற ஜன் சுராஜ் தற்போது அனைத்து தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரங்கள் வெளியாகி வரும் நிலையில் ரூ.10,000 விலைக்கு போன பீகார் தேர்தல்.. வெறும் ரூ.200க்கு ஓட்டுகள் விற்கப்பட்டுள்ளன என ஜன் சுராஜ் கட்சி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
பொய்யான பிரசாந்த் கிஷோரின் வியூகம்
நிதிஷ் குமாரின் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வென்றால் அரசியலில் இருந்தே வெளியேறுகிறேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது 80 தொகுதிகளுக்கு மேல் ஜேடியு முன்னிலையில் உள்ளது.
இதனால் பிரசாந்த் கிஷோரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரதமர் மோடியின் அரசியலில் பயணத்தில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. 3டி மோடி பிரச்சாரம், மிஷன் 272+, உள்ளிட்டவை பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூக்கத்தில் தனித்து அடையாளம் காட்டியது. இதேபோல் தமிழகத்திலும் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்க தேர்தல் வியகத்தை வகுத்து தந்து பல கோடி ரூபாய் ஊதியமாக பெற்றவர்தான் இந்த பிரசாந்த் கிஷோர்.
தேர்தல் வியூகத்தில் சாணக்கியராக, கிங் மேக்கராக இருந்த பிரசாந்த் கிஷோரை பீகார் மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர் என்பதே நிதர்சனம்.
