Bihar Election Result 2025 : மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் மீண்டும் பின்னடைவு

By Pandeeswari Gurusamy

|

Published on 14 Nov 2025, 12:05 PM

பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பீகாரில் 243 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

பீகாரை பொறுத்தவரை ரகோபூர் தொகுதி யாதவ் குடும்பத்தின் பாரம்பரிய கோட்டை என பார்க்கப்பட்டது. பீகாரில் நடந்த கடந்த கால தேர்தல்களில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தேஜஸ்வி ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி ரகோபூர். 2025 ம் ஆண்டு தேர்தலிலும் ரகோபூர் தொகுதி மக்களை நம்பியே தேஜஸ்வி யாதவ் களம் கண்டார்.

ஆனால் இந்த முறை ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் கடும் சவாலை சந்தித்து வருகிறார்.

ADVERTISEMENT

பாதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை எதிர்த்து வலுவான போரட்டங்களை முன்னெடுத்த தேஜஸ்வி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தார். மேலும் SIR க்கு எதிரான பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தார்.

இதைத்தொடர்ந்து 2025ம் ஆண்டு தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் களம் கண்டார். ஆனால் அவர் போட்டியிட்ட ரகோபூர் தொகுதியில் தற்போது கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT

ரகேபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் 3,016 வாக்குகள் வித்தியாசத்தில் 14,583 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சதீஷ் குமார் 17,599 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருந்தது உற்று நோக்கப்பட்டது.

இந்நிலையில் 6ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 219ம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 23,531 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் 9ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 2,288 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் 33,347 வாக்குகள் பெற்றுள்ளார்.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தேஜஸ்விக்கு ரகோபூர் தொகுதி கைகொடுக்குமா என்பது வாக்கு எண்ணிக்கை முடிவில்தான் தெரிய வரும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel