பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக பட குழு அறிவித்துள்ளது.
2 கே கிட்ஸ்களின் ஸ்டாராக மாறி இருக்கிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக டியூட் படத்தில் நடித்தார்.
அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் மமீதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வந்தன.
இந்த சூழலில் தயாரிப்பு நிறுவனம் டியூட் படம் எவ்வளவு வசூலித்தது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி முதல் நாளில் உலக அளவில் டியூட் படம் ரூபாய் 22 கோடியை கடந்து வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி பிரதீப் ரங்கநாதன் தனது மூன்றாவது படத்திலேயே கமர்சியல் ஹீரோவாக மாறி இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
