பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். pollachi sexual harrasement case verdict
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25), ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என்று . கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று(மே 13) தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “9 எதிரிகளும் குற்றவாளிகள் என்று அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதனால் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளின் வயது, அவர்களின் பெற்றோர் வயது ஆகியவற்றை குறிப்பிட்டு வாதிட்டனர்.
அரசு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கை பொறுத்தவரை 376டி, ன் படி கும்பல் பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டுள்ளது. 376 (2)ன் படி மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உச்சபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்ற அரசு தரப்பில் தெளிவாக கூறியுள்ளோம்.
குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.
இந்த வழக்கில் 48 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. இதில் ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாகவில்லை. பெண்கள் அனைவரும் தைரியமாக, சுதந்திரமாக கடைசி வரை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தனர்” என்று கூறினார். pollachi sexual harrasement case verdict