பொள்ளாச்சி பாலியல் வழக்கு : வீடியோ வைரல் முதல் நீதிபதி மாற்றம் வரை… 6 ஆண்டுகளாக நடந்தது என்ன?

Published On:

| By Kavi

what happend in pollachi sexual harrasement case

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று (மே 13) தீர்ப்பும், தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட்டன. what happend in pollachi sexual harrasement case

கடந்த 2019 ஆம் ஆண்டு, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. 

ADVERTISEMENT

கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொடூரன்களிடம், இளம் பெண்கள் கெஞ்சும் வீடியோ ஒன்று வைரலானது. 

அதில், அண்ணா அடிக்காதீங்க ப்ளீஸ்… என்னை விட்டு விடுங்கள் என்று ஒரு பெண் கதறுகிறார். 

ADVERTISEMENT

இந்த வீடியோ வெளியானதும் பெண்கள் அமைப்பினர், அப்போதைய எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் என பலரும் போராட்டத்தில் குதித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இப்போது வரை, அதாவது நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட, பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த வழக்கில் என்ன நடந்தது? what happend in pollachi sexual harrasement case

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் தனது சகோதரரிடம் இது பற்றி கூறவே, தங்கையிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞர்களை சுற்றி வளைத்து அவரது சகோதரர் விசாரித்தபோது, அந்த இளைஞர்களின் செல்போன்களில் ஏராளமான இளம் பெண்களின் பாலியல் வன்கொடுமை வீடியோவும் அவர்கள் துன்புறுத்தப்படும் வீடியோவும் இருந்தன. 

ADVERTISEMENT

இந்த நிலையில், 2019 பிப்ரவரி 12ஆம் தேதி பொள்ளாச்சி கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

2019 பிப்ரவரி 24ஆம் தேதி இந்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களைத் தொடர்ந்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசை போலீசார் தேடி வந்தனர். அப்போது தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வீடியோ வெளியிட்டார். 

எனினும் தொடர்ந்து அவரை தேடி வந்த போலீசார் 2019 மார்ச் 5ஆம் தேதி கைது செய்தனர். 

100 ஆபாச வீடியோக்கள் what happend in pollachi sexual harrasement case

அப்போது மேலும் பல வீடியோக்கள் போலீசார் கையில் சிக்கியது. அவை அனைத்தும் திருநாவுக்கரசின் ஐபோனில் இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் அவரது ஃபோனில் இருந்ததாக போலீசார் கூறினர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக சிக்கியது இந்த வீடியோக்கள் தான். அதேபோன்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுவும் வழக்கிற்கு முக்கிய ஆதாரமானது.

இதையடுத்து வழக்கின் தீவிரம் மற்றும் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

தொடர்ந்து வழக்கு பதிந்த இரண்டு மாதங்களிலேயே சிபிஐக்கு மாற்றப்பட்டது. 

இந்த நிலையில் மே 24 2019 அன்று பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சபரி ராஜன், சதீஷ்குமார், வசந்த ராஜன், திருநாவுக்கரசு ஆகியோருக்கு எதிராக முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

சிபிஐ வழக்கை கையில் எடுத்த பின் அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

தொடர்ந்து 2021 பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வழக்கில் 9ஆவது நபராக அருண்குமார் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 2021 ஆகஸ்ட் 16ஆம் தேதி இவர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 48 சாட்சிகளை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. பாதிக்கப்பட்ட 8 பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி நேரடியாக சாட்சியம் அளித்தனர். இவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் ஐபோன், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய எலக்ட்ரானிக் பொருட்களே ஆதாரங்களாக சேர்க்கப்பட்டன. ஐபோனில் எடுக்கப்பட்ட வீடியோக்களின் தேதி, நேரம் ஆகியவை முக்கியமானதாக இருந்தது. அதன்படி சுமார் 200 ஆவணங்கள் 40 மின்னணு தரவுகள் உட்பட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

வாட்ஸ் அப் குழுவை தொடங்கி அதில் இளம் பெண்களின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

1500 பக்க குற்றப்பத்திரிகை! what happend in pollachi sexual harrasement case

பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை. 

மொத்தம் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. 

முக்கியமாக இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் ஒவ்வொரு வாய்தாவின் போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடி வீடியோ காலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். 

இந்த சூழலில் இவர்களிடம் சட்ட விதிகள் 313 ன் கீழ்  கேள்விகள் கேட்டு விசாரணை நடத்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரும் கடந்த மே 5ஆம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிபதி நந்தினி தேவி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். 

அவர்கள் ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள்  கேட்கப்பட்டு அவை வீடியோவாக பதிவு செய்யப்பட்டன. 

இந்த நிலையில் அரசு மற்றும் எதிர் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மகளிர் நீதிமன்றம் அறிவித்தது. 

இப்படி வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தமிழகத்தில் 77 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து உயர் நீதிமன்ற பதிவாளர் அல்லி உத்தரவு பிறப்பித்தார். 

இந்த 77 பேரில் பொள்ளாச்சி பாலியல்  வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவியும் ஒருவராக இருந்தார். 

எனினும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆரம்பம் முதல் விசாரணை நடத்தி வந்த நீதிபதி நந்தினி தேவி மறு உத்தரவு வரும் வரை அதே நீதிமன்றத்தில் பணிபுரிவார் என்று பதிவாளர் அல்லி தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் நீதிபதி நந்தினி தேவி இன்று (மே 13) தீர்ப்பு வழங்கியுள்ளார். 

அதில், குற்றம் சாட்டப்பட்ட சபரி ராஜன் (ஏ1), திருநாவுக்கரசு(ஏ2), சதீஷ்குமார்(ஏ3), வசந்தகுமார்(ஏ4), மணிவண்ணன் (ஏ5), பாபு என்கிற பைக் பாபு(ஏ6), ஹேரேன்பால்(ஏ7) அருளானந்தம்(ஏ8), அருண்குமார்(ஏ9) ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். 

தண்டனை விவரம் what happend in pollachi sexual harrasement case

முதல் குற்றவாளி சபரிராஜன் – 4 ஆயுள் தண்டனை, ரூ.40,000 அபராதம்

இரண்டாவது குற்றவாளி திருநாவுக்கரசு – 5 ஆயுள் தண்டனை ரூ.30,500 அபராதம்

மூன்றாவது குற்றவாளி – 3 ஆயுள் தண்டனை, ரூ.18,500 அபராதம்

நான்காவது குற்றவாளி – 2 ஆயுள் தண்டனை, ரூ.13,500 அபராதம்

5வது குற்றவாளி மணிவண்ணன் – 5 ஆயுள் தண்டனை, ரூ.18,000 அபராதம்

6வது குற்றவாளி பாபு – ஒரு ஆயுள் தண்டனை, ரூ .10,500 அபராதம்

7வது குற்றவாளி ஹேரேன்பால் – 3 ஆயுள் தண்டனை, ரூ.14,000 அபராதம்

8வது குற்றவாளி அருளானந்தம் – ஒரு ஆயுள் தண்டனை, ரூ. 5,500 அபராதம்

9வது குற்றவாளி அருண்குமார் – ஒரு ஆயுள் தண்டனை, ரூ.5,500 அபராதம்

இந்த அபராத தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரித்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு அவர்களுக்கு 85 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ. 10 முதல் 15 லட்சம் வரை கிடைக்கும் வகையில் பிரித்து கொடுக்கப்படும்.

இவ்வழக்கில் வலுவான ஆதாரங்கள் இருப்பதால், மேல்முறையீடு சென்றாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் என சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறியுள்ளார். what happend in pollachi sexual harrasement case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share