பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

Published On:

| By Kavi

Pollachi sexual harrasement case

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்குமான தண்டனை விவரத்தை கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. Pollachi sexual harrasement case

 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்ணா அடிக்காதீங்கண்ணா என்று பெண்கள் கதறிய வீடியோ நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கு போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கும், பின்னர் சிபிஐக்கும் மாற்றப்பட்டது. நீதிமன்றத்தில் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின் இன்று (மே 13) தீர்ப்பு வந்துள்ளது.

அதில் திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25), ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 9 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தண்டனை விவரங்கள் தொடர்பாக மூடப்பட்ட அறையில் நீதிபதி நந்தினி தேவி விசாரணை மேற்கொண்டார்.

இவர்களுக்கான தண்டனை விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தணனை விதிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடுக்கு சென்றாலும் தண்டனையில் மாற்றம் இருக்காது” என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வகையில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share