தமிழக காவல்துறை தகவல் தொழில்நுட்பத்தில் பின் தங்கியிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. Police lagging behind in information technology
வேலூரைச் சேர்ந்த மோகன் தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி தன்னிடம் சென்னையை சேர்ந்த இருவர் 13 லட்சம் மோசடி செய்துவிட்டனர். இதுதொடர்பாக கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்.
ஆனால் அதன் மீது எந்தவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு காவல்துறை சார்பில், “இரண்டு மாதங்களில் இந்த வழக்கு தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் போலீசாருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று (மே 2) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “நீதிமன்றம் உத்தரவுகளை பின்பற்ற உரிய விதிகளை வகுக்க வேண்டும். உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை ஆன்லைன் முறையில் கண்காணிக்கப்படுவதாக கூறினாலும் கூட கள நிலவரங்கள் வேறாக உள்ளது. ஒவ்வொறு முறையும் நீதிமன்றத்தின் கதவை தட்டவேண்டிய நிலைதான் உள்ளது.
தமிழ்நாடு காவல்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருக்கிறது” என்று நீதிபதி வேதனை தெரிவித்தார். Police lagging behind in information technology
தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது எனவும் குறிப்பிட்டார். Police lagging behind in information technology