சாதி சான்றிதழ்களை முழுமையான விசாரணைக்கு பிறகே வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Caste certificates should be issued
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அதில்,“போலி சாதி சான்றிதழ் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விசாரணையை குறித்த கால கெடுவுக்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் அமர்வில் இன்று (மே 2) விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான காலவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
பட்டியலினம் மற்றும் பழங்குடியினர்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
விதிகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழு அமைக்க வேண்டும்.
முழுமையான விசாரணைக்கு பிறகே சாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக 6 வாரங்களில் தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். Caste certificates should be issued