கடந்த 2014-ஆம் ஆண்டு மதுரையில் ஆட்சியராக இருந்த சகாயம், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி சட்ட ஆணையராக இருந்து கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தார். police clarifies sagayam life threatening
2020-ஆம் ஆண்டு சகாயம் விருப்ப ஓய்வு பெற்றார். 2021-ஆம் ஆண்டு ‘அரசியல் பேரவை’ என்ற கட்சியைத் தொடங்கினார். சட்டமன்ற தேர்தலில் சகாயத்தின் அரசியல் பேரவை கட்சி 20 இடங்களில் போட்டியிட்டது.
இந்தநிலையில், கிரானைட் குவாரி தொடர்பான வழக்கு மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேரில் ஆஜராக முடியாது என்று சிறப்பு அரசு வழக்கறிஞருக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் சகாயம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “மாநில அரசு எனக்கு வழங்கிவந்த பாதுகாப்பை விலக்கிவிட்டது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை.
கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் எனது பாதுகாப்பு விலக்கப்பட்டது தவறானது, மிகவும் ஆபத்தானது. நான் சட்ட ஆணையராக இருந்தபோது எனக்கு இரண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தன. அந்த புகார் தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு விலக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “சகாயத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு 2023 மே மாதமே திரும்ப பெறப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெற்றதாக சொல்கிறார். ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், இதுதொடர்பாக டிஜிபி-க்கு அப்போதே கடிதம் எழுதியிருக்கலாம். இரண்டு வருடம் கழித்து ஏன் இப்போது பேசுகிறார்? இதில் அரசியல் காரணங்களும் இருக்கலாம்” என்கிறார்கள். police clarifies sagayam life threatening