இன்று (ஆகஸ்ட் 15) பிரதமர் மோடி 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றினார்.
அப்போது அவர், “2014-ஆம் ஆண்டில் 10ஆவது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது 2023ஆம் ஆண்டில் 5ஆவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்குச் சென்றது. இந்த எண்ணிக்கைகடந்த 9 ஆண்டுகளில் 100 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஏழைகளுக்கு வீடுகளைக் கட்ட 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிடப்படுகிறது. விவசாயிகளுக்கு யூரியாவுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. 13.5 கோடி மக்கள் வறுமையின் சங்கிலிகளை உடைத்து புதிய நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து 6ஜி பற்றி பேசிய பிரதமர் மோடி, “உலகிலேயே மிக வேகமாக 5ஜியை வெளியிடும் நாடு நமது இந்தியா. இதுவரை 700க்கு மேற்பட்ட மாவட்டங்களுக்கு 5ஜி சென்றடைந்துள்ளது.
இப்போது நாடு 6ஜியை அறிமுகப்படுத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்ற வருகின்றன. விரைவில் 5ஜியில் இருந்து 6ஜி மாற்றத்தை நோக்கிச் செல்வதற்கான டாஸ்க் ஃபோர்ஸும் அமைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
முன்னதாக 6ஜி தொழில்நுட்பம் தொடர்பான 200 காப்புரிமையை இந்தியா பெற்றுள்ளது என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியிருந்தார்.
5ஜியை விட 6ஜியில் இணைய வேகம் 100 மடங்கு அதிகமாக இருக்கும் எனவும் 5ஜி ஒரு வினாடிக்கு 10 ஜிகாபிட் வேகத்தை இருக்கும் நிலையில் 6ஜி ஒரு வினாடிக்கு 1 டெராபிட் வேகம் வரை செல்லும் எனவும் தொலைத்தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
தடா சந்திரசேகரன் மறைவு: அரைக்கம்பத்தில் பறக்கும் நாம் தமிழர் கொடி!