விடுதலை புலிகள் இயக்க ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளருமான தடா சந்திரசேகரன் உடலுக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை புலிகள் இயக்க ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளருமான தடா சந்திரசேகரன் உடல்நலக்குறைவால் நேற்று (ஆகஸ்ட் 14) காலமானார். அவருக்கு வயது 64.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக தடா சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.
தடா சந்திரசேகரன், தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் இயக்கம் குறித்தும் தமிழ்தேசியம் குறித்தும் தொடர்ந்து பேசி வந்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை புலிகளுக்காக வாதாடியவர்.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை கொட்டிவாக்கம் ஜெகநாதன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது சொந்த ஊரான மதுரை கே.கே.நகருக்கு இன்று (ஆகஸ்ட் 15) அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு நாளை காலை 9 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தடா சந்திரசேகரன் உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
தடா சந்திரசேகரன் மறைவையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தடா சந்திரசேகரன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு இன்று அஞ்சலி செலுத்தினார்.
செல்வம்
“ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது இது அரவணைப்பதற்கான காலம்”- சத்குரு
சுதந்திர தினவிழா: விருதுகள் வழங்கிய முதல்வர்!