இந்தியாவின் 24 நகரங்களை குறிவைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. pakistan send 500 drones attack
நேற்று இரவு இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் சண்டை நடைபெற்றது.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடியாக இந்தியா மீது தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று இரவு 8 ஏவுகணைகள், இரண்டு போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பிய நிலையில் அவை அனைத்தும் இந்தியாவின் எஸ்.400 என்ற வான்வழி பாதுகாப்பு அமைப்பு மூலம் செயலிழக்க செய்யப்பட்டன.
இந்த சூழலில், பாகிஸ்தான் 500 ட்ரோன்களை அனுப்பி 24 நகரங்களை தாக்க முயன்றதாக இந்திய ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.
இரவு 8 மணி முதல் 11:30 மணி வரை ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்தில் உள்ள 24 நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் சுமார் 500 சிறிய ட்ரோன்களை அனுப்பியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்.70, ஷில்கா மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவமும் விமானப்படையும் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.

இந்த 500 ட்ரோன்களில் பெரும்பாலும் ஆயுதம் ஏந்தாதவையாக இருந்துள்ளன. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்கும், இந்திய ராணுவ நிறுவல்கள் குறித்த உளவுத்துறை தகவல்களை சேகரிப்பதற்காக இருக்கலாம் என்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களின் வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது.pakistan send 500 drones attack