பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் காஷ்மீரில் இரண்டு பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத முகாம்களை குறி வைத்து மே 7ஆம் தேதி இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று இரவு 8 மணி முதல் இருநாட்டுக்கும் இடையே கடும் ஆயுதச் சண்டை நடைபெற்றது.
இந்த நிலையில் பாகிஸ்தான் – இந்தியா இடையேயான தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று (மே 9) மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்பை வேண்டுமென்று குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. 2 school kids killed in Pakistan attack
குருத்வாரா, தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் மீது வேண்டுமென்றே பாகிஸ்தான் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
மே 7ஆம் தேதி அதிகாலை எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி முழுவதிலும் பாகிஸ்தான் குண்டுகளை வீசி கடுமையாக தாக்கியது. இதில் பூஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்ட் பள்ளிக்கு பின்னால் ஒரு குண்டு விழுந்தது. இதில் இரண்டு பள்ளி மாணவர்களின் வீடு முற்றிலும் சேதமடைந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தன. அவர்களின் பெற்றோர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 school kids killed in Pakistan attack
கோயில்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் தனது தாழ்வு நிலையை காட்டுகிறது” என்றார். 2 school kids killed in Pakistan attack
கர்னல் சோபியா குரேசி இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கையில், “இந்தியாவின் 36 நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றது. சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் அனுப்பப்பட்டன.
நேற்று இரவு முழுவதும் நமது ராணுவ முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் ட்ரோன்களை திறமையாக சுட்டு வீழ்த்தியதாகவும் கூறினார்.
இந்த ட்ரோன்கள் துருக்கியைச் சேர்ந்தவை என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறிய அவர், இந்தியாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் போயிங் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியது.
உரி, உதம்பூர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. இத்தகைய தாக்குதலின் போது பயணிகள் விமான சேவைக்கான வான்வழி தடம் மூடப்படும். ஆனால் பாகிஸ்தான் பயணிகள் விமான சேவைக்கான வான்பரப்பை மூடாமலேயே இருந்தது. தாக்குதல் நடந்த சமயத்தில் கராச்சி- லாகூர் இடையேயான வான்வழித் தடத்தில் பாகிஸ்தான் தனது வான்வழியை பயன்படுத்தியது. எனினும் இந்தியா கவனமாகவே இருந்தது” என்று கூறினார்.
எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியுள்ளார்.
