ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் மாநிலம் பூஜ் வரை மீண்டும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்தது. ஆனால் இந்திய ராணுவம், இந்த டிரோன்களை இடைமறித்து அழித்தது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இடைவிடாமல் ஷெல்தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் அரசு அதிகாரி உட்பட 5 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜம்மு காஷ்மீர் முதல் பூஜ் வரையில் மொத்தம் 26 இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் டிரோன்கள் தென்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஏவிய ஒரு டிரோன், இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. Pakistan Targets 26 More Locations
ஜம்மு காஷ்மீரில் தமது வீடு அருகே இடைவிடாமல் வெடிகுண்டு சப்தங்கள் கேட்டு வருவதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்தார். Pakistan Targets 26 More Locations
இதனிடையே பாகிஸ்தானின் விமான தளங்களை இலக்கு வைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் ராவல்பிண்டி விமான தளத்தை ஏவுகணைகள் மூலம் இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. Pakistan Targets 26 More Locations
அத்துடன் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட 5 பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் இடைவிடாமல் வெடிகுண்டு சப்தங்கள் கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதுவரை பாகிஸ்தானின் பயணிகள் வான்பரப்பு மூடப்படாமல் இருந்தது பயணிகள் விமான சேவையை இந்தியாவுக்கு எதிரான கேடயமாக பயன்படுத்தி வந்தது பாகிஸ்தான். தற்போது இந்தியாவின் இடைவிடாத தாக்குதல்களால் பாகிஸ்தான் வான்பரப்பு முழுவதுமாக மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இடைவிடாத தாக்குதல்களால் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லை மாநிலங்கள் அனைத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் எச்சரிக்கை அலாரம் ஒலித்துக் கொண்டே இருந்தது. பாகிஸ்தானின் தாக்குதலில் அரசு அதிகாரி ஒருவர் உட்பட 5 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன்ர்.
இதனிடையே பாகிஸ்தானின் சில இடங்களில் மிதமான நிலநடுக்கமும் உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 4.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டரில் 4.0 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
