பாகிஸ்தான் மீதான தாக்குதலில் குறைந்தது 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Operation Sindoor is not over
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
மே 7ஆம் தேதி அதிகாலை 25 நிமிடங்களில் 9 தீவிரவாத முகாம்களை இந்தியாவின் ஏவுகணைகள் அழித்தன.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஏவிய ஏவுகணையை இந்தியா வான் வழியிலேயே தடுத்து நிறுத்தி செயலிழக்க செய்ததாக இந்திய ராணுவம் கூறுகிறது.
அதேசமயம் இந்தியா அனுப்பிய 12 ட்ரோன்களை அழித்ததாக பாகிஸ்தான் கூறுகிறது.
இவ்வாறு எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “இந்தியா நடத்திய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் தொடரும். இந்தியா எந்த ஒரு தீவிரவாத நடவடிக்கைக்கும் பதிலளிக்க தயாராக உள்ளது. எதிரி படைகள் தாக்கினால் இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும்” என்று கூறினார். Operation Sindoor is not over
இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் எம்.பி.டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ” அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் தலைவர்களும் இந்தியாவின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும் அரசாங்கத்துடன் துணை நிற்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இந்த அமைச்சரவை கூட்டம் தொடர்பாக ராஜநாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. கற்பனை செய்ய முடியாத தாக்குதலை இந்தியா நடத்தியிருக்கிறது. இது இந்தியாவுக்கு பெருமையான தருணம். ஆப்ரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை” என்று கூறினார். Operation Sindoor is not over