ஒரு பெண் எந்த வயதில் அழகாகத் தெரிவார் என்ற கேள்விக்குப் பலரும் பதினேழு முதல் 24 வயது வரை ஏதோ ஒரு எண்ணைச் சொல்வதே வழக்கம். திரையுலகைப் பொறுத்தவரை, அந்த எண்கள் இன்னும் சிறியதாக இருக்கும். ஆனால், சமீபகாலமாக அந்த நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மூத்த நடிகர்கள் என்றில்லை, நடுத்தர மற்றும் இளம் நடிகர்களோடு ஜோடி சேர்கிற பல நடிகைகளின் வயது சராசரியாக 25க்கும் அதிகமாகவே உள்ளதைக் காண முடிகிறது. பூஜா ஹெக்டே, ராஷ்மிகா, ருக்மினி வசந்த், கியாரா அத்வானி, மாளவிகா மோகனன் என்று பலரும் அந்த வயதைத் தாண்டியவர்களாக இருப்பதே அதற்குச் சாட்சி.
அந்த வரிசையில் தமிழ், தெலுங்கு, இந்தியில் முக்கியமான நாயகியாக விளங்குபவர் மிருணாள் தாகூர். அடவி சேஷின் ‘டகாய்ட்: எ லவ் ஸ்டோரி’, அல்லு அர்ஜுன் – அட்லீ படம், இரண்டு இந்திப் படங்கள் என்று ரொம்பவே பிஸியாக இருந்து வருகிறார்.

’தனுஷின் புதிய கேர்ள்ப்ரெண்ட்’ என்பது போன்ற செய்திகளால் தமிழ் சினிமா ரசிகர்களும் இணையத்தில் தேடக்கூடிய நாயகியாகத் திகழ்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கமானது 1 கோடியே 52 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களை கொண்டிருக்கிறது.

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சில புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் மிருணாள் வெளியிட்டார். அவற்றைப் பார்க்கிற ரசிகர்கள், ‘தேவதை என்பவர் இப்படித்தான் இருப்பாரோ’ என்கிற ரேஞ்சில் கமெண்ட்களை வாரியிறைத்து வருகின்றனர்.
அந்த புகைப்படங்களைப் பார்த்தபிறகு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்..?