போன படத்துல பாதிக்கப்பட்டவர், இந்த படத்துல போலீஸ் ஆபிசர் – ‘லாலேட்டன்’ பட அறிவிப்பு!

Published On:

| By uthay Padagalingam

mohanlal film update

’எம்புரான்’, ’துடரும்’ படங்களைத் தொடர்ந்து, சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘ஹ்ருதயபூர்வம்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. mohanlal film update

இது போக மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டியுடன் நடிக்கும் ’பேட்ரியாட்’, ஜீத்து ஜோசப்பின் ‘த்ருஷ்யம் 3’, பான் இந்தியா படமான ‘விருஷபா’ என்று வரிசையாக ‘சூப்பர் காம்பினேஷன்’களை கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இன்னொன்றாக இணைந்திருக்கிறது ‘எல்365’.

ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில், ரதீஷ் ரவி எழுத்தாக்கத்தில் ஆஸ்டின் டான் தாமஸ் இயக்கும் இப்படத்தில் மோகன்லால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதனைப் படத்தின் அறிவிப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.

’போலீஸ் புரசிஷர்’ என்று சொல்லப்படுகிற காவல்துறையின் தினசரி நடைமுறைகள், செயல்பாடுகள் பற்றி விளக்கமளிக்கிற வகையில் சமீபகாலமாகப் பல மலையாளப் படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. டொவினோ தாமஸின் ‘அன்வேஷிப்பின் கண்டதும்’,  திலேஷ் போத்தனின் ‘ரோந்து’ என்று அந்த வரிசை நீளமானது.

அதில் குறிப்பிடத்தக்கதாக ‘எல்365’ இருக்கும் என்று கொண்டாடுகின்றனர் லாலேட்டன் ரசிகர்கள். கூடவே, இது ஒரு கிரைம் இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்குமென்றும் உறுதிபடச் சொல்கின்றனர்.

மோகன்லாலின் சமீபத்திய ஹிட்டான ‘துடரும்’ படத்தில் வில்லன் பாத்திரத்தில் பிரகாஷ் வர்மா நடித்திருந்தார். அதில் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டராகத் தோன்றியிருந்தார். அவரிடம் மாட்டிக்கொண்டு பாதிக்கப்படுகிற சாதாரண மனிதனாக மோகன்லால் நடித்திருந்தார். அந்த படம் தந்த தாக்கத்தை மறக்கடிக்கிற வகையில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதேநேரத்தில், ‘தினமும் ஒரு படம்னு வருஷம் முழுக்க பார்த்தாலும் லாலேட்டன் நடிச்ச படங்களை ரசித்து முடிக்க முடியாது போலிருக்கே’ என்று ரசிகர்கள் அலுத்துக்கொள்ளும் அளவுக்கு 365வது படத்தில் அவர் நடிக்கவிருப்பதும் சாதாரண விஷயம் அல்லவே. mohanlal film update

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share