ADVERTISEMENT

விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், நிதி அகர்வால் உட்பட 29 பிரபலங்கள் மீது ed வழக்க்குப்பதிவு!

Published On:

| By christopher

ed booked case against vijaydevarakonda prakashraj

சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் விஜய்தேவரகொண்டா, ராணா உட்பட 29 தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ed booked case against vijaydevarakonda prakashraj

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலியை பயன்படுத்தி பலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதனை விளம்பரத்தியது தொடர்பாக தெலங்கானாவின் ஹைதராபாத் மற்றும் சைபர்பாத் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வழக்கை எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த செயலியை விளம்பரப்படுத்திய குற்றத்திற்காக ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அதன்படி ஜங்லீ ரம்மி, ஏ23, பரிமேட்ச் மற்றும் லோட்டஸ் 365 உள்ளிட்ட சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காக விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ், நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, ப்ரணிதா சுபாஷ் ஆகிய 6 நடிகர்கள் மற்றும் 19 சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்ஸ் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொழுதுபோக்கு என்ற போர்வையில் சூதாட்ட செயலிகளை இந்த பிரபலங்கள் விளம்பரப்படுத்தியதாகவும், பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்பு மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாகவும் அமலாக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மூலம் கிடைத்த வருவாய் மூலமே நடிகர்களுக்கு ஊதியம் கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்த நிலையில், சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை விரைவில் சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share