பில்கேட்ஸை பாராட்டிய மோடி: வைரல் வீடியோ!

Published On:

| By Jegadeesh

உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் தான் ரொட்டி சமைக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில், செப் ஒருவர் தான் இந்தியா சென்று வந்ததாகவும், அங்கு பிரபலமான ரொட்டியை சமைக்கும் முறையை பில் கேட்ஸூக்கு கற்றுக் கொடுக்கிறார்.

ADVERTISEMENT

மாவு பிசைந்து, அந்த மாவை உருண்டையாக பிடித்து வட்டமாக தேய்த்து சப்பாத்தி சுடுவதை பின்பற்றி, பில்கேட்ஸ் ரொட்டி சுட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதள பக்கங்களில் வைரலானது.

இந்நிலையில், பில்கேட்ஸின் சமையலுக்கு பிரதமர் மோடி தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Modi praised Bill Gates

மேலும், “இந்தியாவில் ஆரோக்கியமான உணவுகளின் ஒன்று திணை. இந்தியாவில் பல தினை உணவுகள் உள்ளன. அவற்றையும் நீங்கள் செய்து பார்க்கலாம்” என்று சிரித்த எமோஜியுடன் சமூகவலைதள பக்கத்தில் பில் கேட்ஸ் சமையல் செய்யும் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

இடைத்தேர்தல்: இரட்டை இலைக்கு ஓபிஎஸ் ஆதரவு!

ஒப்புதல் படிவம்: தமிழ் மகன் உசேன் முக்கிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share