சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 29) காவல்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது. இந்த மானியக்கோரிக்கையில், போலீசாரின் எதிர்பார்ப்புகள் குறித்து, கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி மானியக்கோரிக்கை… அதிருப்தியில் போலீஸ்… சமாளிப்பாரா ஸ்டாலின்? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். mk stalin announced police
அதில், போலீசுக்கு பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்திருந்தோம். இந்தநிலையில், காவலர்களுக்கான பதவி உயர்வு காலத்தை குறைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில்,
“பொதுமக்களுக்கு பயனுள்ள மற்றும் உதவிகரமான சேவையை வழங்குவதற்காக காவல்துறையினரின் செயல்திறனை ஊக்குவிப்பது அவசியமாகும்.
இதன் ஒருபடியாக, காவலர்கள் பதவி உயர்வில் ஏற்படும் காலதாமதத்தினை கருத்தில் கொண்டு, உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள, காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் (Upgradation) காலத்தை 10+5+10 ஆண்டுகள் என்பதை மாற்றி, 10+3+10 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்படும். அதாவது, 10 ஆண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல்நிலைக் காவலர்களாகவும்,
மேலும், அவர்கள் 3 ஆண்டுகள் (ஆக மொத்தம் 13 ஆண்டுகள்) முதல்நிலைக் காவலராக பின்னர் பணிபுரிந்த தலைமைக் காவலர்களாகவும், தலைமைக் காவலராக 10 ஆண்டுகள் (ஆக மொத்தம் 23 ஆண்டுகள்) பணிபுரிந்த பின்னர், சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் தரம் உயர்த்தப்படுவர். இதற்கான செலவினம் ரூபாய் 28.19 கோடியாகும்.
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், காவல்துறையில் 2,833 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படைக்கு 850 காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 1,983 காவலர்கள்), சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறைக்கு 180 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்கு 350 தீயணைப்பாளர்கள் ஆக மொத்தம் 3,363 நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. mk stalin announced police