மகளிர் உரிமைத் தொகை : புதிய வாய்ப்பு!

Published On:

| By Kavi

magalir urimai thogai scheme

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் வரும் ஜூன் 4 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். magalir urimai thogai scheme

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1000 பெற்று 1.16 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

 கடந்த 19 மாதங்களில் 21,657 கோடி ரூபாய் உரிமைத்தொகையாக மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை உரிமைத்தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த மகளிருக்கு, புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். ஜூன் முதல் இதற்கான பணிகள் தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தூத்துக்குடியில் இன்று (ஏப்ரல் 30) செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன்,  “வரும் ஜூன் 4 ஆம் தேதி மக்களுடன் முதல்வர் என்ற முகாம்களில் விடுபட்டவர்கள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், தகுதியின் அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும். மொத்தம் 9,000 முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது.

அந்த முகாம்களுக்கு சென்று ஏற்கனவே திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அதைப்போல விண்ணப்பம் செய்யாமல் இருக்கும் பெண்கள், தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பம் செய்துகொள்ளலாம்” என்று கூறினார். magalir urimai thogai scheme

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share