சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 28-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறை, தீயணைப்புத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற உள்ளது. demands for grants stalin
இதுதொடர்பாக, காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “போலீசில் சேருபவர்களுக்கு 25 வருடம் பணி முடிந்தவுடன் எஸ்.ஐ பதவி வழங்கப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், 25 ஆண்டுகள் முடிந்த பிறகு தான் எஸ்.எஸ்.ஐ ( சிறப்பு எஸ்.ஐ) பதவியே கொடுக்கிறார்கள். அதனால் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றம் அதிகரிக்கிறது. அதைத்தடுக்கும் வகையில், போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சுமார் 400-க்கு மேற்பட்ட காவல்நிலையங்கள் உதவி ஆய்வாளர் ஸ்டேஷனாகவே இருக்கிறது. அதனை, இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனாக மாற்ற வேண்டும் என்று ஹோம் டிப்பார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்தும் நிதி இல்லை என்று பதில் சொல்கிறார்கள்.
போலீஸுக்கு வருடத்திற்கு இரண்டு செட் யுனிஃபார்ம், ஷூ, கேப் கொடுக்கிறார்கள். ஆனால், அந்த யூனிபாஃர்ம் தரமற்றதாகவும், ஷூ அன்சைஸாகவும் உள்ளதால் பயன்படுத்த முடியாமல் வீணாய் போகிறது. இதனால் போலீஸார் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது.
அதனால், காவலர்களின் அதிருப்தியை ஓரளவுக்கு குறைக்கும் வகையில், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், நிதி செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் கூட்டாக ஆலோசனை செய்தார்கள். demands for grants stalin
யூனிஃபார்ம் வழங்குவதற்கு பதிலாக 4,500 ரூபாய் நேற்று மாலையில் இருந்து அனைத்து காவலர் மற்றும் அதிகாரிகளின் சம்பள வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால், காவலர்கள் மத்தியில் சற்று அதிருப்தி குறைந்துள்ளது.

மேலும், யுனிஃபார்மை போல ஷூ, கேப் வாங்கவும் பணம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். போலீஸ் கேன்டீன் ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும், மாநகர காவல்துறை தலைநகரத்திலும் செயல்பட்டு வருகிறது. அந்தந்த கேண்டீனுக்கு தேவையான பொருட்களை அவர்களே பர்சேஸ் செய்து வந்தனர். இதனால் தேவையான பொருட்கள் கிடைத்தது.
ஆனால், சமீபகாலமாக அனைத்து கேன்டீனுக்கும் தலைமையில் இருந்து பர்சேஸ் செய்து பொருட்களை சப்ளை செய்வதால், தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால் வாங்காத பல பொருட்கள் கேன்டீனில் தேங்கிக்கிடக்கிறது. அதனால், இந்த கேன்டீனுக்கு தேவையான பொருட்களை அந்தந்த மாவட்டத்திலேயே பர்சேஸ் செய்து கொள்ள அனுமதி வழங்கினால் காவலர்களுக்கும் ஓய்வு பெற்ற காவலர்களுக்கும் பலனுள்ளதாக இருக்கும்.
அதேபோல, முதற்கட்டமாக 25 சதவிதம் முதல் 30 சதவிகிதம் வரை எஸ்.ஐ ஸ்டேஷனை, இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனாக உயர்த்த அறிவிப்பு வெளியாகும்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். demands for grants stalin
