ADVERTISEMENT

மிஸ் யூ டீஸர்… மீண்டும் ரொமான்ஸ் மோடுக்கு திரும்பிய சித்தார்த்

Published On:

| By Minnambalam Login1

miss you teaser

சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ படத்தின் டீஸர் இன்று(நவம்பர் 12) காலை 11 மணிக்கு யூடியுபில் வெளியானது.

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய படங்களை இயக்கிய என்.ராஜசேகரின் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், பால சரவணன்,மாறன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன் ‘சித்தா’ மற்றும் ‘இந்தியன் 2’ வில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்த சித்தார்த், இந்த படத்தில் மீண்டும் ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மோடுக்கு திரும்பியுள்ளார் என்பது இந்த படத்தின் டீஸர் மூலம் தெரிகிறது.

டீஸரின் முதல் காட்சியில் கஃபே போன்ற ஒரு கடையை நடத்துபவராக  சித்தார்த் தோன்றுகிறார். கட் செய்தால், பல நபர்களை அடித்து, கடை கண்ணாடிகளை நொறுக்குகிறார்.

ADVERTISEMENT

இதற்குப் பின்வரும் காட்சிகளில் கதாநாயகி ஆஷிகாவின் கதாபாத்திரத்தை அவர் சந்திப்பது எனக் காட்சிகள் விரிகிறது. சித்தார்த்தின் நண்பர்களாக ‘லொல்லு சபா’ மாறன் மற்றும் பால சரவணன் தோன்றுகிறார்கள்.

7 மைல்ஸ் பெர் செகண்ட் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தை தொகுத்துள்ளார்.

ADVERTISEMENT

சித்தார்த் தரப்பில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மீன் ஆகியோருடன் இவர் நடித்திருக்கும் ‘டெஸ்ட்’, ‘இந்தியன் -3’ அடுத்து வெளிவர இருக்கின்றன. மேலும் அவரது 40வது படம் ‘8 தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலரட்!

சர்ச்சைக்குரிய வாட்ஸ்அப் குரூப் : இரு ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

ஹெல்த் டிப்ஸ் : குளிர் காலத்தில் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share