தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 12) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி அளவில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மணிக்கு 5 முதல் 15 மில்லி மீட்டர் வரை மழைப் பதிவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ” அடுத்த இரண்டு மணி நேரத்திற்குச் சென்னையில் மழை தொடர்ந்து பெய்யும். அதற்குப் பின் சிறிது நேரம் நிற்கும். குறிப்பாகத் தென் சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆரில் நிற்கும் எனவும், அதற்குப் பின் வட சென்னை பகுதியில் மழை பெய்வது நிற்கும்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் மழை பெய்வது தொடரும் ” என்று தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
எடப்பாடி நீலிக் கண்ணீர் வடிக்கிறார் : திமுக குற்றச்சாட்டு!
’குரூப் 4 காலி பணியிடங்கள் இனி அதிகரிக்கப்படாது’ : டிஎன்பிஎஸ்சி திட்டவட்டம்!
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!