சர்ச்சைக்குரிய வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி, அதில் கருத்துகள் பகிர்ந்தது தொடர்பாக இரு ஐஏஎஸ் அதிகாரிகளை கேரளா அரசு நேற்று (நவம்பர் 11) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் குறித்து தலைமைச் செயலாளர் சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளது.
கடந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று, ‘மல்லு இந்து ஐஏஎஸ் அதிகாரிகள்’ என்ற வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் கேரளா மாநிலத்தில் உள்ள பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடம்பெற்று இருந்தனர்.
இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான ஒழுங்கு உத்தரவு படி, மதம் மற்றும் ஜாதி ரீதியில் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்ற விதி உள்ளது.
அப்படி இருக்கையில் மத ரீதியில் பெயர் கொண்ட ‘வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
குரூப்பை ஆய்வு செய்த போது அதன் அட்மின் ஆக இருந்தது அம்மாநில தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநரான கோபாலகிருஷ்ணன் பெயரை காட்டியது. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த குரூப் கலைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறினார். இது குறித்து போலீசில் புகார் அளித்த அவர், ‘எனது போன் ஹேக் செய்யப்பட்டதுடன், அதன் மூலம் 11 வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன’ என்று கூறியிருந்தார்.
அவரது புகாரின் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு உயர்மட்ட விசாரணை நடத்தியது. எனினும் தடயவியல் பரிசோதனைக்குப் பிறகும், ஹேக்கிங் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுதொடர்பாக கேரள அரசு தலைமைச் செயலாளர் ஜெய திலக் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கோபாலகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் விவசாயத் துறையின் சிறப்புச் செயலாளர் என்.பிரசாந்த் ஐஏஎஸ் ஆகிய இருவரையும் ஒழுங்கு மீறல் நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சிறுவனை கொன்ற இந்தியர்… சவுதி சிறையில் 18 ஆண்டுகள்… தாயாரை சந்தித்த தருணம்!
எடப்பாடி நீலிக் கண்ணீர் வடிக்கிறார் : திமுக குற்றச்சாட்டு!