தற்போது மழை காலம்… பனி காலமும் தொடங்கிவிட்டது.
குளிர்காலத்தில் நடைப்பயிற்சி ஆகியவற்றை தவிர்த்தல் மற்றும் பருவகால மாற்றங்கள் காரணமாக மக்கள் பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை எதிர்கொள்கின்றனர்.
இதை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்…
கீரை வகைகள்
வைட்டமின் ஏ, சி, கே, நார்ச்சத்துகளை கொண்டது கீரை வகைகள். இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கீரைகளில் நைட்ரேட்டுகள் உள்ளன. இது அதிக ரத்த அழுத்தத்தை குறைத்து சீராக இருக்க உதவும். இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் எதிர்த்துப் போராடுகின்றன.
நட்ஸ்
முந்திரி, பிஸ்தா, பேரீச்சை, பாதாம் மற்றும் வால்நட் ஆகியவை அளவாக சாப்பிடும்போது குளிர்காலத்தின் சோர்வைப் போக்கி, உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கும்.
மாதுளை
மாதுளையில் பாலிஃபீனால்கள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. மாதுளை ஜூஸ் குடிப்பதன் மூலம், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இருதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
பூண்டு
பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு, ஆன்டிவைரல், ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அதிகம் உள்ளன. இது குளிர் காலத்தில் சளி இருமல் வராமல் தடுக்க உதவுகிறது. தினமும் பூண்டை உட்கொள்வதால் இதயம் மற்றும் இதய நோய்களான பக்கவாதம், மாரடைப்பு மற்றும் பலவற்றைத் தடுக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : வடமாவட்டங்களில் கனமழை முதல் முதல் கஸ்தூரி மனு விசாரணை வரை!
துணை முதல்வர் உதயநிதியின் துணை செயலாளராக ஆர்த்தி நியமனம்!
பியூட்டி டிப்ஸ்: திடீர் மச்சம்… அழகா, ஆபத்தா?
விரைவு விசாவை நிறுத்திய கனடா அரசு: பாதிக்கப்படும் இந்திய மாணவர்கள்!