வேளச்சேரி- தாம்பரம்: மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

Published On:

| By Minn Login2

Tambaram to Velachery Metro Rail

Tambaram to Velachery Metro Rail

சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகளவு மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். குறைந்த நேரம், குளிர்சாதன வசதி ஆகிய காரணங்களால் நாளுக்குநாள் மெட்ரோவில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

அடுத்த கட்டமாக, முக்கிய இணைப்புப் பகுதியாக இருக்கும் வேளச்சேரிதாம்பரம் இடையே மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பயணிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் லைட் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த, கடந்த  2019-ம் ஆண்டு முடிவுசெய்து, சாத்தியக்கூறு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.

ஆனால், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதற்கு தயக்கம் காட்டியது.

Tambaram to Velachery Metro Rail

இந்நிலையில், தாம்பரம்-வேளச்சேரி மற்றும் வேளச்சேரி-கிண்டி இடையே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து மீண்டும் சாத்தியக்கூறு ஆய்வு நடத்த, சிஸ்ட்ரா எம்.வி.ஏ. கன்சல்டிங் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள், ”கூடுதல் வழித்தடங்களை இணைக்கும் போதுதான், பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இந்த நோக்கத்திலேயே புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் 1 திட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

Tambaram to Velachery Metro Rail

தாம்பரம் – வேளச்சேரி மற்றும் வேளச்சேரி – கிண்டி இடையிலான மெட்ரோ ரயில்  திட்டத்தின்படி, அங்குள்ள பிரதான சாலையை ஒட்டியே, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

அடுத்த 3 மாதங்களில் இந்தப் பணி முடிந்தவுடன், இந்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் மேற்கொள்ளப்படும்”, என தெரிவித்து உள்ளனர்.

மேற்கண்ட இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

எனவே பயணிகளின் இந்த கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்குமா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மாணவ நிருபர் கவின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்

பாமகவுடன் அதிமுக மறைமுக பேச்சுவார்த்தையா?: எடப்பாடி பழனிசாமி பதில்!

நடிகர் அஜித்குமார் எப்படி இருக்கிறார்? : வெளியான புதிய தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share