ADVERTISEMENT

திருக்கோவிலூர் வட போச்சே…. அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

டீ குடிச்சிட்டு இருக்கும்போது நம்ம நண்பரோட பேஸ்புக் ஸ்டேட்டஸ் பாத்துட்டு இருந்தேன். பொன்முடிக்கு மறுபடியும் எம்எல்ஏ பதவி கிடைச்சிருச்சுன்னு அதிகாரப்பூர்வமா அறிவிச்சிட்டாங்க. அந்த நேரம் பார்த்து அவருடைய திருக்கோவிலூர் தொகுதி நண்பர் தான் அந்த ஸ்டேட்டஸ போட்டிருந்தாரு. என்ன ஸ்டேட்டஸ்னு இன்னும் உங்களுக்கு புரியலையா…

வட போச்சே இடைத்தேர்தல் வட போச்சே அதுதான் அவருடைய கவலை.

ADVERTISEMENT

அவங்கவங்களுக்கு ஆயிரம் கவலை…. இவருக்கு இடைத்தேர்தல் கவலை.
நீங்க அப்டேட் பாருங்க…

ADVERTISEMENT

வசந்த்
சமகவை பாஜகவுடன் இணைத்த ஆத்திரத்தில் மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்!
இதுவும் நடு ராத்திரியில் எடுத்த முடிவா தான் இருக்கும்.

ச ப் பா ணி
செவிக்கு உணவு கொடுத்து, வயிற்றுக்கு டீ பிஸ்கெட் கொடுப்பதே ஆபிஸ் மீட்டிங்

ADVERTISEMENT

ArulrajArun
தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்”
-தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
# எது தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறமா

Kirachand
10 ஆண்டு பாஜக ஆட்சி வெறும் வெறும் டிரெய்லர் தான்…
– மோடிஜி
டிரெய்லர் பாத்தியாடா?
நான் தூங்கிட்டேன்ணே!

நெல்லை அண்ணாச்சி
மக்கள் சமத்துவ கட்சியை பாஜகவுடன் “இணைத்தார்” சரத்குமார்
அட.. இது நம்ம list லயே இல்லையே..கமல்ஹாசன்..

கடைநிலை ஊழியன்
நான் பொறுப்புக்காக வரவில்லை.. பொறுப்பாக இருக்க வந்துள்ளேன் – சரத்குமார் #
நைட்டு 2 மணிக்கு யோசிச்ச டயலாக்’கா

ℳsd இதயவன்
பாஜக கூட்டணி ‘மெகா’ கூட்டணியாக அமைந்துள்ளது~ ஓபிஎஸ்
நோட்டாகிட்ட ‘ஜகா’ வாங்குற கூட்டணி னு சொல்றாரோ?!

balebalu
அடி மேல அடி வெச்சா , SBI வங்கியும் நகரும்

ℳsd இதயவன்
இரவு தூக்கம் வரவில்லையாம்.. மனைவியிடம் கருத்து கேட்டாராம் என கிண்டல் செய்கிறார்கள். மனைவியிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது?” – சரத்குமார், பாஜக
அதான கட்சியில் மொத்தமே இருக்கிற இன்னொரு ஆளிடம் கேட்காம வேற யாருகிட்ட கேட்க ?!

ச ப் பா ணி
இங்கு சொல்லாத இடம் கூட வியர்க்கின்றது.
மனம் கூலான இடம் தேடி அலைகின்றது..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலை – 5000 பேருக்கு வேலைவாய்ப்பு : டாடா குழுமம் ஒப்பந்தம்!

பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்… முக்கிய நபர்கள் யார் யார்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share