செங்கல் மீதான 12% ஜிஎஸ்டியை 5% ஆக குறைக்க வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என செங்கல் மற்றும் ஓடு உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் ஜிஎஸ்டி வரி கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சில துறைகளில் அதிருப்தி நிலவுகிறது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய செங்கல் மற்றும் ஓடு உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் All India Brick and Tile Manufacturers Federation (AIBTMF), செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை 12%-ல் இருந்து 5% ஆக குறைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. ஆனால் இதனை யாரும் கருத்தில் கொள்ளவே இல்லை.
இனியாவது செங்கல் மீதான 12% ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்த நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
