பெரிய கம்பெனியா… சின்ன கம்பெனியானு பாக்க கூடாது : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்… அப்ப நம்ம நண்பர் சோகமா வந்திருந்தாரு. என்ன நண்பானு கேட்டேன்.

இல்ல… கம்பெனியில வேலைல இருந்து தூக்கின பிறகு, எந்த பெரிய கம்பெனியில இருந்தும் வேலை கிடைக்கல… சின்ன சின்ன கம்பெனில இருந்துதான் ஆஃபர் வருதுனு புலம்புனாரு.

ADVERTISEMENT

இதை கேட்ட நம்ம டீ மாஸ்டரு, தம்பி நம்ம ஒரு வேலைல இருந்தா, அந்த கம்பெனிய விட பெரிய கம்பெனியா ட்ரை பண்ணலாம்… ஆனால் தூக்கிட்டா.. சின்ன கம்பெனியா இருந்தாலும் சேர்ந்தரனும்… இப்பத்திய நிலைமைக்கு அதுதான் நல்லதுனு அட்வைஸ் பன்னாரு..

அதுவும் சரிதான்… நம்ம தமிழக அரசியலும் அப்படிதான இருக்கு…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

mohanram.ko

ADVERTISEMENT

ஏன்ணே அவன அடிக்கிறீங்க ….
தவெக வில் இருந்துகிட்டே அதிமுகவை ஒன்றிணைப்பாரா செங்கோட்டையான்னு கேட்கிறான்..

balebalu

செங்கோட்டையன் நவ் :ஊர்ல கட்சி மாறி எத்தனையோ அரசியல்வாதிங்க சந்தோசமா இருக்காங்க ஆனா
இந்த Gen Z ரசிக கூட்டம் , ஆதவ் , புஸ்ஸி ன்னு வெச்சுகிட்டு நான் பட போற அவஸ்தை …
அய்யய்யயோ

கோழியின் கிறுக்கல்!!

சண்டை காட்சிகளில் உடைக்கிறதுக்காக வைக்கப்பட்டிருக்கிற நடைப்பாதை கடைப் போலவே,
பல பேரின் வாழ்க்கையில் நான்!

Selva Bharathi

எத்தனை தான் படித்திருந்தாலும், எத்தனை உயரத்தில் இருந்தாலும் எளியவர்களை நடத்தும் விதத்தில் இருக்கிறது, ஒருவரின் பண்பு.

ச ப் பா ணி

ஜாலியா இருக்கிறோம்கிறதை உலகிற்கு காட்டுவதற்கு ஒருவழிதான்..
பாட்டு பாடுவது

சரவணன். 𝓜

த.வெ.க.வில் இணைந்தார் செங்கோட்டையன்..
அதிமுகவினர் ~ நிஜமாவே இவர் டம்மி பீஸ் தான் போல…

பாக்டீரியா

வணக்கம் நண்பா நண்பீஸ் எல்லாம் இன்னைக்கு ஜாலியா இருபீங்கனு தெரியும்
உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி நமக்கு இன்னும் 232 கேண்டிடேட் வேனும்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

அண்ணே.. நம்ம கட்சில சேர வர்ற அவர் சட்டை பாக்கெட்ல அவரோட முன்னாள் கட்சி தலைவரோட போட்டோவை வைச்சுருக்கார்னே..

பரவால்ல விடுடா.. அவங்களையும் நம்ம கொள்கை தலைவர்கள்ல ஒருத்தர்னு அனவுன்ஸ் பண்ணி போட்டோவுக்கு மாலை போட்டுருவோம்..

கோழியின் கிறுக்கல்!!

ரோட்டை கடக்கிறப்ப, எதிர் திசைல வந்த ஒரு பொண்ணு என்னைப் பார்த்து சிரிச்சிட்டே வர,
நானும் சிரிக்க எத்தனிக்கும் போது தான் கவனிச்சேன்,
Earbuds போட்டு பேசிட்டு போகுது!!
சின்ன கேப்ல கிறுக்கன் ஆகியிருப்பேன்!!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share