பிக் பாஸ் வீட்டுக்கும் காலை உணவு போடலாம் சிஎம் சார்: அப்டேட் குமாரு!

Published On:

| By christopher

என்னடா ஒரே சத்தமா இருக்கேனு டிவி சவுண்டை குறைக்க ரிமோட்டை தேடுனேன். எல்லாம் பிக் பாஸ் சந்தை சத்தம்தான்.
காலையில கோதுமை மாவு கரைச்சுக்கிட்டிருக்கும்போது அந்த அம்மா குறுக்க வந்துடுச்சுனு நிக்‌ஷன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டிருந்தாப்ல. கோல மாவு கோகிலா போல கோதுமை மாவு கோகிலாவானு  நாங்க காமெடி பண்ணிக்கிட்டிருக்கும்போதே  விஜய் வர்மாவும் பிரதீப் ஆண்டனியும் அடிச்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க.  நல்ல வேளையா நான் ரிமோட்டை கண்டுபுடிச்சு சேனலை மாத்திடேன்…
சிஎம் சார்… காலை உணவுத் திட்டத்தை எல்லா ஸ்கூலுக்கும் விரிவுபடுத்திட்டீங்க. அப்படியே இந்த பிக் பாஸு வீட்டுக்கும் சேர்த்து போட்டுருங்கய்யா… கமல்கிட்ட காசை வாங்கிக்கலாம்.  லட்சம் கோடியா சம்பாதிச்சும் கூட  ஒரு டிபனுக்கு இவனுக  காட்டுற  அலப்பறையும் ஆட்டிடியூட் டும்  தாங்க முடியலை.
ஜனங்களே… நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
மீ- தியேட்டர் சீட் எல்லாம் கிழிச்சு இப்படி களேபரம் ஆக்கி வெச்சுட்டாங்களே என்ன செய்ய போறீங்க?
தட் தியேட்டர் ஓனர் – ஒண்ணும் பிரச்சனை இல்லை அதெல்லாம் ‘பாப்கார்ன்’ விலையை ஏத்தி சமாளிச்சுக்குவோம்
Chellapaiyaa…
எதுக்கு வந்தோம்ன்னு மறந்துட்டு முழு நேர சமையல்காரனவே மாறிட்டாங்கல…
திஸ் small house பாவங்கள் – BiggBoss7tamil
சரவணன். ????
அக்னியை சுற்றி வராவிட்டால் இந்து திருமணம் செல்லாதுன்னு நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லிட்டாங்க..
~ யாரு குஜராத் மாநில நீதிபதியா?
ஆமாங்கய்யா..
vijaychakkaravarthy
Mom ~ பொய் சொன்னதுக்கு தானே அம்மா உன்ன அடிச்சேன், ஆழக்கூடாது செல்லம்…
Kid ~ சரிம்மா,இனிமே பொய் சொல்ல மாட்டேம்மா…
Mom – அப்பா கேட்டா கதவுல இடிச்சிகிட்டேன்னு சொல்லனும் சரியா…
தென்புலத்தான்
மாற்று உடைக்கு வழியில்லாத காலத்தில் வாழ்வின் பிடிப்பை
தளரவிடாமல் பார்த்துக் கொண்டது அரைஞாண் கயிறு….!
5 எலி
உன்ன பாத்தா அக்டோபர் மாசம் மாதிரி தெரியல
ஏதோ மே மாசம் மப்டில வந்த மாதிரி இருக்கு
இன்னா வெயிலு
Kirachand
பாஜகவில் இணைந்த ரவுடி குணாவுக்கு கட்சி பொறுப்பு!#
இனி ‘நானும் ரவுடிதான்’னு கூறிக்கொண்டு பலர் பாஜகவில் சேருவாங்களோ?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அக்னியை சுற்றி வராவிட்டால் இந்து திருமணம் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு #
இதென்ன பிரமாதம்..?
அடுத்து புருசன் பூரி கட்டைல அடி வாங்கின தழும்பு இல்லாம வந்தா டைவரஸ் தர மாட்டேன்னு சொல்லுவாங்க பாருங்க..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Asian Games 2023: 100 பதக்கங்களை நெருங்கிய ‘இந்தியா’!

டிஜிட்டல் திண்ணை: அதிமுக மாஜிகளின் தலையெழுத்தை மாற்றும் ஆளுநரின் கையெழுத்து! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share