சென்னை, மத்திய கைலாஷ் பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். madhya kailash L-shaped bridge
சென்னை, சர்தார் பட்டேல் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சர்தார் பட்டேல் சாலையையும் – ராஜீவ் காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில் “L” வடிவ மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதனை பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜூலை 23) ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தி, 2025 அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சர்தார் பட்டேல் சாலையில், காந்தி மண்டபம் சாலை முதல் ஜி.எஸ்.டி. சாலை வரை, IIT, அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இருப்பதால், அந்தப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், தற்போதைய நான்கு வழித்தட சாலையை, ஆறு வழித்தடமாக விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளார். madhya kailash L-shaped bridge
.