பிரதமர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து பயணத்தில் அந்நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது. India UK
இங்கிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அந்நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இங்கிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பலன்கள்?
- அடுத்த 3 ஆண்டுகளில் விவசாய ஏற்றுமதி 20% அதிகரிக்கும்
- 95% விவசாய பொருட்களுக்கு வரி இல்லாத ஏற்றுமதி
- பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பலன் தரும்
- திருப்பூர், கான்பூர் உள்ளிட்ட உற்பத்தி மையங்களில் கைவினைஞர்கள், நெசவாளர்கள், தினக் கூலி தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- இங்கிலாந்தின் 4-வது பெரிய ஜவுளி சப்ளையர் என்ற நிலையை வலுப்பெற வைக்கும்
- பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள், இயற்கை மூலிகைகள் ஏற்றுமதி அதிகரிக்கும்.
- மஞ்சள், மிளகு, ஏலக்காய் ஆகியவற்றுக்கு பரந்த சந்தை வாய்ப்பு உருவாகும்
- மாம்பழம், திராட்சை, பலா போன்ற பொருட்கள் இங்கிலாந்தின் அதிக மதிப்புள்ள சந்தைகளால் பயனடையும்.
- தொழிலாளர்களை செறிவாக கொண்ட ஜவுளித்துறை சிறப்படையும்.
