கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவை மேலும் இரண்டு கொலை வழக்குகளில் மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். Taylor Raja arrested
கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி எல்.கே.அத்வானி கோவை வந்தார்.
அத்வானி பேச இருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. இதைத்தொடர்ந்து கோவை நகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். Taylor Raja arrested
இந்த குண்டுவெடிப்பு வழக்கில் 150க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து 56 பேரை குற்றவாளியாக உறுதி செய்த சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை அறிவித்து மற்றவர்களை விடுவித்தது.
பின்னர் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களில் சிலர் தனித்தனியே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுவிக்கப்பட்டனர். Taylor Raja arrested
இந்நிலையில் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். அவரை கடந்த 9ஆம் தேதி கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வைத்து கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் டெய்லர் ராஜா மீதுள்ள மற்ற வழக்குகள் குறித்து தற்போது போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். நாகூர் சயீதா என்ற பெண்ணின் கொலை வழக்கிலும், மதுரை ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை வழக்கிலும் கோவை மத்திய சிறையில் இருக்கும் டெய்லர் ராஜாவை, மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
மதுரை மற்றும் நாகூர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை டெய்லர் ராஜாவிடம் மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் வழங்கினர்.
இதைத்தொடந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் டெய்லர் ராஜா ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.or Raja arrested
முன்னதாக கர்நாடக மாநிலம் விஜய புராவில் உள்ள டெய்லர் ராஜா வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் அவர் ஷாஜகான் ஷேக் என்ற பெயரில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அந்த பெயரில் ஆதார் அடையாளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
