’லவ் டுடே’ இவானாவின் முதல் தெலுங்கு படம்!

Published On:

| By uthay Padagalingam

love today ivana introuduce in telugu film single

’லவ் டுடே’ படம் மூலமாகப் பெருமளவில் ரசிகர்களைப் பெற்றவர் நடிகை இவானா. குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரை ‘நாச்சியார்’ படத்தில் நாயகி ஆக்கினார் இயக்குனர் பாலா. பிறகு ‘ஹீரோ’வில் ஒரு துணை பாத்திரம் ஏற்றார். love today ivana introuduce in telugu film single

அப்போது ‘இந்த படத்துக்குப் பிறகு பிஸியாகிடுவாங்க’ என்று திரையுலகைச் சேர்ந்தவர்களில் பலர் நினைத்தனர். ஆனால், அதன்பிறகு தமிழில் எல்ஜிஎம்: லெட்ஸ் கெட் மேரீட், மதிமாறன், கள்வன் ஆகிய படங்கள் மட்டுமே அவர் நடிப்பில் வந்தன. இதில் ‘எல்ஜிஎம்’ என்பது கிரிக்கெட் வீரர் தோனி முதன்முறையாகத் தயாரித்த திரைப்படம். ‘மதிமாறன்’ முழுமையாகத் தயாராகிச் சில காலம் காத்திருப்பில் இருந்தது. ’கள்வன்’னும் கூட கிட்டத்தட்ட அப்படியானதுதான்.

இந்த நிலையிலேயே, தற்போது இவானா நடிப்பில் ‘#சிங்கிள்’ எனும் தெலுங்கு படம் வெளியாகிறது.

இந்த படத்தில் நாயகனாக ஸ்ரீவிஷ்ணு நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக கேத்திகா நடித்திருக்கிறார்.

கேத்திகா என்பவர் ’ராபின்ஹூட்’ படத்தில் வந்த ‘அதி தா சர்பிரைஸு’ பாடலுக்கு சர்ச்சைக்குரிய வகையில் உடையணிந்து நடனமாடியவர்.

ஸ்ரீவிஷ்ணு தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர். சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, உதவி இயக்குனராகத் திரையுலகில் நுழைந்து, பின்னர் துணை பாத்திரங்களில் நடித்து மெல்ல நாயகன் ஆனவர். ராஜ ராஜா சோரா, அர்ஜுனா பால்குனா, சாமஜவரகமனா போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர். ‘அல்லூரி’ என்ற படத்தில் இவரோடு காயாடு லோஹர் நடித்த காட்சிகள் தான் ‘ட்ராகன்’ படத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ராஜு தமிழில் திருடன் போலீஸ், உள்குத்து படங்களைத் தந்திருக்கிறார். தெலுங்கில் அவர் இயக்குகிற மூன்றாவது படம் இது.

இப்படத்தைத் தயாரித்திருப்பது அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ். இப்படிப் பல விஷயங்கள் இப்படத்தில் இருந்தாலும், நீண்ட நாட்கள் கழித்து இவானாவை அழகுறக் காட்டும் இப்படம் என்ற உத்தரவாதமே தமிழ் ரசிகர்கள் இதனைக் கவனிக்கக் காரணம். இப்படம் மே 9ஆம் தேதியன்று வெளியாகிறது.

எப்படியும் ஓடிடியில் வெளியாகும்போது, இதன் தமிழ் பதிப்பு நிச்சயம் வந்துவிடும். இதற்கு நடுவே, ‘தெலுங்கு படத்துல இவானாவா’ என்று எஸ்.ஜே.சூர்யா ரேஞ்சில் சில தீவிர ‘இவானா’ ரசிகர்கள் படபடக்கலாம்.

‘#சிங்கிள்’ திரைப்படம் அவர்களை எப்படி சாந்தப்படுத்தப் போகிறதோ?!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share