’இன்னும் என்னை காமெடியனாவே நினைக்கறீங்கள்ல’… யார் இந்த லொள்ளுசபா மாறன்?

Published On:

| By uthay Padagalingam

Lollu Sabha Maaran

லொள்ளுசபா மாறன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளுசபா’ நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் தனக்கென்று ஒரு ‘ரசிக கூட்ட’த்தை உருவாக்கியவர்.

அதில் நாயகர்களாக வந்த பாலாஜி, சந்தானம், ஜீவாவை மீறி இவரை ரசித்தவர்கள் பலர். காரணம், இவரது தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் காமெடி டைமிங்.

திரைப்படங்களிலும் அதனை அப்படியே பிரதிபலித்தது அவருக்கான இடத்தைப் பெறவிடாமல் அணை போட்டது. இதோ இப்போது, தனக்கான வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ‘பத்தோடு பதினொன்று அல்ல’ என்று தன்னை நிரூபித்திருக்கிறார் மாறன். Lollu Sabha Maaran

லேசாக அவரது பின்னணியை உற்றுநோக்கினால், ‘இவர் இப்படியெல்லாம் இருந்திருக்கிறாரா’ என்று கேட்குமளவுக்கு இருக்கிறது அந்தப் பாதை.

சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட திரைப்படக் கலைஞர்களில் ஒருவர், மாறன். இவரது உண்மையான பெயர் இளஞ்சேரன். Lollu Sabha Maaran

கலையுலகில் நுழையும் வரை அந்தப் பெயரைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார். அதன்பின்னரே ‘மாறன்’ என்றாகியிருக்கிறார். Lollu Sabha Maaran

மாறனின் தந்தை திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியில் பேச்சாளராக இருந்திருக்கிறார். அதனால், அக்கட்சியின் தலைவர்கள் பலரைச் சிறு வயதில் நேரில் சந்தித்த அனுபவம் இவருக்குண்டு. Lollu Sabha Maaran

ஆனால், மாறனுக்கோ பொதுவுடைமை சித்தாந்தத்தின் மீதான பற்று அதிகம். அது பதின்ம வயதுகளில் தொடங்கியது. காரணம், அவரது ஓவியத் திறமை.

பள்ளியில் பயிலும்போது ‘சுமார்’ மாணவராக இருந்த மாறன், தன்னிடம் இருந்த ஓவியம் வரையும் திறமையைப் பட்டை தீட்டுவதற்கான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். Lollu Sabha Maaran

சுவர் ஓவியம் வரையத் தொடங்கியவர், ஒருகட்டத்தில் ‘வடிவமைப்பு’ தொடர்பான வேலைகளில் ஈடுபட்டார். பொதுவுடைமைக் கட்சியினருடன் போராட்டங்களில் இறங்கி, போலீசாரால் கைது செய்யப்பட்ட அனுபவங்களும் இவருக்குண்டு.

பிறகு, சில காலம் நியாய விலைக்கடையிலும் பணியாற்றியிருக்கிறார் மாறன். என்ன காரணத்தினாலோ, அதனை விட்டுவிட்டு மீண்டும் ஓவியப் பணிகளுக்குத் திரும்பியிருக்கிறார். மெல்ல ‘செட் வடிவமைப்பு’ தொடர்பான வாய்ப்புகள் தேடி வர, அப்படியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலை வடிவமைப்பை மேற்கொள்வது என்று மாறியிருக்கிறது இவரது வாழ்வு.

அப்படித்தான் ‘காமெடி பஜார்’ நிகழ்ச்சியில் தலைகாட்டுகிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது ஜெயா டிவியில் ஒளிபரப்பானது. அதன் தொடர்ச்சியாக, லொள்ளுசபா இயக்குனர் ராம்பாலாவைச் சந்திக்கிற வாய்ப்பு வாய்த்திருக்கிறது.

பிறகு, அக்குழுவினருடன் சேர்ந்து வாரா வாரம் திரையுலக நாயகர்களையும் பிரபலங்களையும் வம்புக்கு இழுத்தது தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் அறிந்ததே.

இவர் ’கஸ்தூரி’ என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார். இது போக காமெடி புரம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் தோன்றியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் நடித்தபோது, ‘ஸ்கிரிப்ட்’ எழுதுவதிலும் பங்களிப்பது மாறனின் வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த அனுபவங்கள் இவரைப் புடம் போட்டு, திரையுலகில்  ‘மிஸ்டர் கிளீன்’ ஆக்கியிருக்கிறது.

தொலைக்காட்சியில் அறிமுகமாகிற காலகட்டத்திலேயே, திரைப்படங்களிலும் ‘நடிகர்’ ஆக ‘எண்ட்ரி’ தந்திருக்கிறார் மாறன். Lollu Sabha Maaran

‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ படத்தில் நாயகன் சிபிராஜின் நண்பராக நடித்திருக்கிறார். அந்த காலத்தில் காமெடி நடிகர் என்பவர் இளமையான நாயகனுடன் கல்லூரிக்குச் சென்றாக வேண்டுமென்கிற எழுதப்படாத விதி இருந்தது. அதனை அவரும் பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து மிலிட்டரி, பச்சக்குதிர, தீபாவளி, வீராப்பு என்று பெயர் சொல்லும்படியான சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். Lollu Sabha Maaran

குறிப்பிட்ட கட்டத்தில் பட வாய்ப்புகள் அருகிப்போக, சில படங்களில் டப்பிங் பேசுவது மற்றும் காமெடி சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவது என்று இருந்திருக்கிறார்.

2013 வாக்கில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்று தயாரிப்பாளராகச் சந்தானம் களமிறங்க, ‘லொள்ளு சபா’ திரைக்கதையாக்கத்தில் ஈடுபட்ட பிரேம், ஆனந்த் இருவரும் இணைந்து ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கான கதையாக்கத்தில் ஈடுபட, அக்குழுவின் உழைப்போடு மாறனின் பங்களிப்பும் ஒன்றிணைந்திருக்கிறது.

பிறகு தில்லுக்கு துட்டு, சக்கபோடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2 என்று கொஞ்சம் மேலே ஏறியது மாறனின் ‘கிராஃப்’. ஏ1 திரைப்படம் அதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ் என்று சந்தானம் நாயகனாக நடித்த பிற படங்களிலும் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் மாறனுக்கு இடம் தந்தனர். அதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது ‘டிக்கிலோனா’.

அந்த படத்தில் மாறன் பேசிய ‘இன்னும் என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கேள்ல’ என்ற வசனம், 2கே மற்றும் ஜென்ஸீ தலைமுறை கொண்டாடுகிற பிரபலமாக அவரை மாற்றியது. அதன் விளைவாக நாய் சேகர், காத்துவாக்குல ரெண்டு காதல், குலு குலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குபட்டி ராமசாமி என்று ஒரு ரவுண்ட் சுற்றினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ’என்ன வெறுமனே வசனம் பேசி காமெடி மட்டுமே பண்றாரு’ என்றிருந்த மாறனின் திரை வாழ்வையே தடம்புரட்டுகிற வகையில் இருந்தது ‘ஜெ பேபி’. இதில் ஊர்வசி, தினேஷ் உடன் அவர் நடித்த காட்சிகளில் கலகலப்பையும் மீறி சோகமும் வருத்தமும் இயலாமையும் ஆற்றாமையும் நிறைந்திருந்தது.

மூன்றாண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருந்த ‘ஜெ பேபி’ தனக்குப் பெரும்பெயரைப் பெற்றுத் தரும் என்று படப்பிடிப்பு காலங்களிலேயே நம்பத் தொடங்கிவிட்டார் மாறன். அதற்கேற்பவே அவரது பெர்பார்மன்ஸும் அமைந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக ஸ்டார், மிஸ்யூ படங்களிலும் கூட அவர் காமெடி கலந்த குணசித்திர பாத்திரங்களையே ஏற்றிருந்தார்.

தான் பணியாற்றிய சில படங்களின் திரைக்கதையாக்கத்தில், வசனத்தில் பங்களித்திருக்கிற மாறன், இயக்குனராக மிளிர்வதற்கான தகுதிகள் நிரம்பப் பெற்றவர். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் அப்படியொரு முயற்சியில் இறங்கியவர். அது சரிவரக் கைவரப்பெறாத காரணத்தால், அந்த கனவை மூட்டை கட்டி வைத்தவர். ’எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தில் ’மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய்’ பாடலை எழுதியவரும் இவரே.

தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளைச் சார்ந்தவர்களின் தினசரி வாழ்வு, சுவரோவியப் பணியில் கிடைத்த மன நிறைவு, கலை இயக்குனராக கேமிரா முன்னே ஆக்கிய கற்பனை உலகம், சுற்றியுள்ளவர்களைக் கலகலப்பூட்டிய தனது இயல்பான பேச்சை ஒரு நையாண்டி டிவி நிகழ்ச்சியில் பிரதிபலித்த விதம், திரையுலகில் ஒரு வெற்றிக் கலைஞனாக உலவ வேண்டுமென்ற வேட்கை, இப்படிப் பலவற்றைக் கடந்த காலங்களில் கண்டவர் ‘லொள்ளுசபா’ மாறன். பன்முக ஆளுமை என்று சொல்வதற்கான அத்தனை அம்சங்களையும் ஒருங்கே கொண்டவர்.

இனி வரும் நாட்களில், மிக முதிர்ச்சியான கலை மனதோடு இந்த சமூகத்திற்குப் பயனுள்ள பல விஷயங்களைப் பொதித்த திரைப்படங்களை மாறன் தர வேண்டும்; அப்படிப்பட்ட படங்களைத் தருகிற குழுவினரோடு கைகோர்த்துப் பணியாற்ற வேண்டும் என்பதே நம் அவா.. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share