கேர்ள் ஃபிரெண்டை கூட பார்க்க விடலை.. யுவராஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்!

Published On:

| By Selvam

தன்னிடம் பயிற்சி பெற்ற அபிஷேக் ஷர்மாவை அவரது கேர்ள் ஃபிரண்டை கூட பார்க்க விடாமல் மிகவும் ஸ்ட்ரிக்டாக யுவராஜ் சிங் பயிற்சி கொடுத்ததாக அவரது தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். Yuvraj stopped Abhishek Sharma

சமீபத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில், 55 பந்துகளில் 141 ரன்கள் அடித்து, அத்தனை பேரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா. இவருக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தான் பயிற்சி கொடுத்து வருகிறார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக யுவராஜ் சிங்கின் தந்தை, யோக்ராஜ் சிங் CricketNext ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,

“அபிஷேக் ஷர்மாவை அவரது அப்பா ஹேண்டில் செய்ய முடியாததால், யுவராஜ் தான் மிகவும் ஸ்ட்ரிக்டாக ஹேண்டில் செய்தார். இரவு 9 மணிக்கெல்லாம் படுத்து தூங்க சொல்வார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து பயிற்சி செய்ய அறிவுறுத்துவார். லேட் நைட் பார்ட்டி, கேர்ள் ஃபிரெண்டுடன் வெளியே செல்ல தடை போட்டார். அவரை ஒரு புரொபஷனல் கிரிக்கெட்டராக மாற்ற வேண்டும் என்பதற்காக தான் ஒழுக்கமான சில விஷயங்களை யுவராஜ் பின்பற்ற சொன்னார்.

ADVERTISEMENT

இதே போல தான் சுப்மன் கில்லுக்கும் யுவராஜ் பயிற்சி கொடுத்தார். ஒரு டைமண்ட் இன்னொரு டைமண்ட் கைகளுக்குள் சென்றால் அது கோஹினுர் டைமண்ட் ஆகிவிடும். அதனால் தான் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் வைரமாக மின்னுகிறார்கள். அதுவே தவறான கைகளுக்கு அந்த டைமண்ட் சென்றால், உடைந்துவிடும். இந்தியாவில் பல வீரர்கள் உடைந்து சிதற அதுதான் காரணம்” என்றார். Yuvraj stopped Abhishek Sharma

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share