சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருள் சரவணன் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி இருந்தார்.
படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தாடி, மீசையுடன் புதிய கெட்டப்பில் உள்ள புகைப்படங்களை சரவணன் வெளியிட்டு இருந்தார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதே அவரின் அடுத்த படத்திற்கான கெட்டப் இதுதான் என பேச்சுக்கள் எழுந்தன.

இந்த நிலையில் சரவணன் நடிப்பில் உருவாகும் இரண்டாவது படத்தை துரை.செந்தில்குமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேச்சுவார்த்தை நடந்தது உண்மை தான் என்றும், ஆனால் அது தன்னுடைய அடுத்த படமாக இருக்குமா? என்பது தெரியவில்லை என்றும் துரை.செந்தில்குமார் தெரிவித்து இருக்கிறார். எனவே இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ படங்களை இயக்கிய துரை. செந்தில்குமார் தற்போது சூரியின் ‘கருடன்’ படத்தை இயக்கி இருக்கிறார். விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேரு இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்: மாநிலங்களவையில் காங்கிரசை கடுமையாக சாடிய மோடி









