மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்பி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் பதவி காலமும் முடிவடைய உள்ளது.
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாஜக இன்று (பிப்ரவரி 14) வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன்படி மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு போட்டியிட எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும், மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்தும் போட்டியிடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து எல்.முருகன் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா