அனுராக் காஷ்யபின் ‘கேங்ஸ்டர்’ என்ற இந்தி படத்தின் மூலம் 2006 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத்.
நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் அரசியல்வாதி என் பன்முக தன்மை கொண்ட கங்கனா ரனாவத் பாஜக சார்பில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.
2019ல் ‘மணிகர்னிகா ஜான்சி ராணி’ படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கியுள்ளார். தற்போது மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி திரைப்படத்தை இயக்கியுள்ளதுடன் அவரே இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வெளியிட பல முறை தேதிகள் அறிவிக்கப்பட்டது. இறுதிக் கட்ட வேலைகள் முடியாததால் வெளியிட முடியாமல் போனது. 2024 செப்டம்பர் 6 ஆம் தேதி எமர்ஜென்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா ரனாவத் வெற்றிபெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும், இதற்கு முன்னர் இவரதுநடிப்பில் வெளியான சந்திரமுகி-2, தேஜஸ், திரைப்படங்களின் தொடர் தோல்விகளாலும் இந்தப் படம் வெற்றி அவருக்கு முக்கியமானது.
ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தி திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திர நடிகர்களாக இருக்கும் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் என மூவரையும் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்த கங்கனா, எமர்ஜென்சி ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அரசியல் தவிர்த்து இணக்கமான நட்பை கோரும் வகையில் பேசி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
“தனது தயாரிப்பு, இயக்கத்தில் மூன்று கான்களையும் நடிக்க வைக்க மிகுந்த ஆசையாக உள்ளது. அவர்களை அழகாக திரையில் காண்பிக்கவும் ஆசை. அவர்களால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் ஒன்றிணைய முடியும். அதனால் அவர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்க முடியும். அவர்களால் இந்தி சினிமாவுக்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றன. அதற்காக அவர்களுக்கு மிகவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
நான் பல நடிகர்களுடன் வேலை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இர்பான் கானை இயக்க முடியாமல் போனதுவருத்தம்தான். அவரை எப்போதும் நான் மிஸ் செய்கிறேன்” என பேசியுள்ளார்.
எமர்ஜென்சி படத்தின்ட்ரெய்லர் எப்படி? –
ஜவஹர்லால் நேருவின் மரணத்துக்குப் பிறகு நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு பதவி ஏற்பதிலிருந்து ட்ரெய்லர் தொடங்குகிறது.
1966-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றது தொடங்கி, 1971-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர் மற்றும் அவசர நிலை குறித்தும் இந்தப் படம் பேசும் என்பதை காட்சிகள் உணர்த்துகின்றன.
மேலும், வாஜ்பாயை சந்தித்து இந்திரா காந்தி பேசியதும், அவரை பாராட்டியது குறித்து படத்தில் பிரதான காட்சிகள் இருக்கும் என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்துகிறது.
இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் கங்கனா ரனாவத். ‘எமர்ஜென்சி என்பது இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம்’ என ட்ரெய்லரில் குறிப்பிடப்படுகிறது.
இறுதியில் ‘இந்தியாதான் இந்திரா, இந்திரா தான் இந்தியா’ என்ற வசனத்துடன் ட்ரெய்லர் முடிகிறது.
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அமுல்படுத்தபட்ட அவசர கால சட்டம், அதனால் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள், இந்தியாவில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் பற்றிய திரைப்படமாக இருக்கும் எமர்ஜென்சி திரைப்படம் என்பதை உறுதிப்படுத்துகிறது ட்ரெய்லர்.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞர் பெற்று தந்த உரிமை: 50ஆவது ஆண்டில் கொடியேற்றும் ஸ்டாலின்
டிஜிட்டல் திண்ணை:அவசர செயற்குழுவின் அஜெண்டா… திருமா, கம்யூனிஸ்டுகளின் திசை… எடப்பாடி போட்ட போடு!
78ஆவது சுதந்திர தினம் : தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி
வேலை நிறுத்தம் கூடாது: என்எல்சி தொழிற்சங்கத்துக்கு உத்தரவு!