கமலின் ‘Thug Life’ ஷூட்டிங் ஆரம்பம்: வீடியோ வெளியிட்ட படக்குழு!

Published On:

| By Monisha

kamalhassan in thug life shooting starts

கமல்ஹாசனின் KH 234 படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்திற்கு thug life என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் – கமல் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கின்றார். கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து Thug Life படத்தை தயாரிக்கிறது.

THUG LIFE படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 24) thug life படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு படத்தில் நடிக்கும் நடிகர்களின் புகைப்படங்களை இணைந்து ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டு “இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

சுப்மன் கில் டூ ரவி சாஸ்திரி.. பிசிசிஐ 2024 விருதுகளை வென்றவர்கள் யார்?

’பாரத ரத்னா’ கர்பூரி தாக்கூர் பிறந்தநாள்: பிரதமர் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share