BCCI Awards 2024 winners

சுப்மன் கில் டூ ரவி சாஸ்திரி.. பிசிசிஐ 2024 விருதுகளை வென்றவர்கள் யார்?

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, கடந்த 4 ஆண்டுகளுக்கான பிசிசிஐ விருதுகளை அறிவித்துள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. BCCI Awards 2024 winners

அதன்படி, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு, ‘சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, 85 வயதான இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், ஃபாரூக் என்ஜினீயருக்கும் ‘சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, 2019-20ஆம் ஆண்டுக்கான ‘பாலி உம்ரிகர் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்’ விருது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2020-21ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்’ விருது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், 2021-22ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்’ விருது ஜஸ்பிரீத் பும்ராவுக்கும், 2022-23ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்’ விருது சுப்மன் கில்லுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, மகளிருக்கான ‘சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருது’ பிரிவில், 2019-20ஆம் ஆண்டு மற்றும் 2022-23ஆம் ஆண்டுக்கான விருதுகளை தீப்தி சர்மாவும், 2020-21ஆம் ஆண்டு, 2021-22ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஸ்மிருதி மந்தனாவும் வென்று அசத்தினர்.

இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் அறிமுகமான சிறந்த வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

அதன்படி, ‘சிறந்த சர்வதேச அறிமுக வீரர்’ விருதை, 2019-20ஆம் ஆண்டிற்கு மயன்க் அகர்வாலும், 2020-21ஆம் ஆண்டிற்கு அக்சர் பட்டேலும், 2021-22ஆம் ஆண்டிற்கு ஷ்ரேயஸ் அய்யரும், 2022-23ஆம் ஆண்டிற்கு யசஸ்வி ஜெய்ஸ்வாலும் பெற்றுக்கொண்டனர்.

மறுபுறத்தில், ‘சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனை’ விருதை, 2019-20ஆம் ஆண்டிற்கு ப்ரியா புனியா, 2020-21ஆம் ஆண்டிற்கு சபாலி வர்மா, 2021-22ஆம் ஆண்டிற்கு ஷபினேனி மேகனா, 2022-23ஆம் ஆண்டிற்கு அமன்ஜோத் கவுர் ஆகியோர் வென்று அசத்தினர்.

2019-20ஆம் ஆண்டில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அணி என்ற விருதை மும்பை அணி வென்றது.

அதேபோல, 2021-22ஆம் ஆண்டிற்கான இந்த விருதை மகாராஷ்டிரா அணியும், 2022-23ஆம் ஆண்டிற்கான விருதை சவுராஷ்டிரா அணியும் வென்றது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

பிப்ரவரி 26 முதல் ஜாக்டோ – ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்!

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

4 மாவட்டங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை: எங்கெல்லாம் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *