நடிகர் விஜய் பிறந்தநாளில் அவரது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸாகும் என இன்று (ஜூன் 20) அறிவிக்கப்பட்டுள்ளது. jananayagan first single release in vijay brithday
திரையுலகில் இருந்து அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய் தனது கடைசி திரைப்படமாக ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், பர்ஸ்ட் சிங்கிள் வரும் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம், ஜனநாயகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை ’தி பர்ஸ்ட் ரோர்’ (The First Roar) என குறிப்பிட்டு வரும் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.