IND VS ENG : 2,763 நாட்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த வீரர்!

Published On:

| By christopher

ENG vs IND : after 8 yrs karun nair in playing 11

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் 2,763 நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் டெஸ்ட் பிளேயிங் லெவன் அணியில் கருண் நாயர் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ENG vs IND : after 8 yrs karun nair in playing 11

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியில் இன்று (ஜூன் 20) முதல் விளையாடுகிறது.

ADVERTISEMENT

இந்தத் தொடர் மூலம் முதன்முறையாக சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இதில் நீண்டகாலமாக பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காத கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

போட்டிக்கு ஒருநாள் முன்னதாக நேற்றே இங்கிலாந்து அணி தனது பிளேயிங் லெவனை அறிவித்த நிலையில், போட்டிக்கு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தான் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்திய பிளேயிங் 11 அணி விவரம்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ADVERTISEMENT

இதன்மூலம் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அறிமுக வீரராக களமிறங்குகிறார். அவருக்கு அனுபவ வீரர் புஜாரா இந்திய அணியின் தொப்பியை வழங்கி வரவேற்றார். ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டர்களாக இடம்பிடித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

எட்டு ஆண்டுகளுக்கு பிளேயிங் 11ல் இடம்!

இவர்கள் தவிர எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்குள் கருண் நாயர் களமிறங்கியுள்ளார். கடந்த அவர் 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் இடம்பிடித்திருந்தாலும், ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை.

இதன்மூலம் இந்தியாவுக்காக இரண்டு போட்டிகளுக்கு இடையில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் தவறவிட்டவர்கள் பட்டியலில் 4வது வீரராக இடம்பிடித்துள்ளார்.

118 ஜெய்தேவ் உனட்கட் (2010-22)
87 தினேஷ் கார்த்திக் (2010-18)
83 பார்த்திவ் படேல் (2008-16)
77 கருண் நாயர் (2017-25)
56 அபினவ் முகுந்த் (2011-17)

ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் (31*) மற்றும் கே.எல்.ராகுல் (34*) ஆகியோர் 20 ஓவர் முடிவில் 60 ரன்களை கடந்து விளையாடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share