மனைவி கொடுத்த புகாரின் பேரில் பிரபல யூடியூபரான விஷ்ணு இன்று (ஜூன் 20) கைது செய்யப்பட்டார். youtuber vishnu arrested after wife complaint
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டகிராம் மூலம் பழகிய பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவரது அண்ணன்களிடம் தர்ம அடி வாங்கியவர் யூடியூபர் விஷ்ணு. அப்போது அவர் விஜய்யின் தமிழக கழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது மேலும் சர்ச்சையானது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் தனது மனைவியும், ஒப்பனை கலைஞருமான அஸ்மிதாவுக்கும், ஏடிஜிபி ஒருவருக்கும் தொடர்பிருப்பதாகவும், தப்பான படங்களில் அவர் நடித்தார் என்றும் விஷ்ணு அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.
இதனையடுத்து விஷ்ணு தன்னை பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஷ்மிதா புகார் அளித்தார்.
அதன்படி இன்று விஷ்ணுவை கைது செய்த போலீசார், நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுத்தது, சமூக வலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்தது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.