நடிகர் பிரபாஸுக்கு வழுக்கையா? புகைப்படத்தால் ரசிகர்கள் சண்டை!

Published On:

| By christopher

Is Prabhas really bald? - ai pic create war

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு உலகளவில் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறினார். அதனைத் தொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார், கல்கி என பான் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். Is Prabhas really bald? – ai pic create war

தற்போது ’தி ராஜா சாப் படத்தில்’ அவர் கவனம் செலுத்தி வரும் நிலையில் பிரபாஸின் வழுக்கை புகைப்படம் ஒன்று இணையத்தில் இன்று வைரலானது. அதில் வழக்கத்திற்கு மாறாக தலையில் முடியில்லாத நிலையில் அவர் காணப்பட்டார்.

இதனையடுத்து அதனை குறிப்பிட்டு மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விமர்சித்தனர். இதனால் பிரபாஸ் மற்றும் மற்ற நடிகர்களின் ரசிகர்களிடையே சமூகவலைதளத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையே பிரபாஸின் இந்த படம் ஏஐயால் உருவாக்கப்பட்டுள்ளது என அவரது உறுதியானது. சமீபத்திய அவரது தோற்றங்களுடன் இந்த புகைப்படம் ஒத்துபோகவில்லை என அவரது ரசிகர்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share